புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளை முடிவுறுத்தி விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்றையநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த வேண்டுகோளை ஏற்ற மன்றானது நிபந்தனையை தளர்த்தியதுடன்; லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இட தேவையில்லை என உத்தரவு பிறிப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஒத்திவைத்து நீதிவான் றியால் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.