பப்புவா நியூ கினியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதுடன் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளதாக கினியா அரசு முதல் கட்டமாக தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள், விமான நிலைய ஓடுபாதைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்தும் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.