2019-ம் ஆண்டுக்கு பின்னரே ஓய்வு குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி வீரரான யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரான யுவராஜ்சிங் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடவுள்ளதாகவும் யுவராஜ் சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டி தொடரை ஆவலுடன் எதிர் நோக்கயுள்ளதாக தெரிவித்த யுவராஜ் சிங் குறித்த தொடர் மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாக தெரிவித்த யுவராஜ் சிங்டெஸ்ட் தொடரை இழந்த பின்னரே இந்திய வீரர்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் 3 தொடர்களில் இரண்டை வென்று இருப்பது இந்திய அணியின் ஆதிக்கத்தை காட்டுவதாகவும் யுவராஜ் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.