Loading...
அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் அமைச்சர்களின் பதவிகளை மாற்றுவதில் எந்த பலனுமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சிமன்ற மன்ற தேர்தலில் அனைத்து மக்களும் வழங்கிய செய்தியை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் செய்தியை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாவிடின் இந்த அரசாங்கத்திற்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது என அவர் மேலும் கூறினார்.
Loading...
அந்தவகையில், அரசாங்கம் தற்போது மக்களுக்கு தகுந்தவகையில் தமது கொள்கைகளை மாற்றம் செய்ய வேண்டும்
மேலும், மக்களின் விருப்பிற்கு மாறாக மாற்றங்களை செய்யாவிடத்து அரசியல் பயணம் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Loading...