Loading...
ஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனையடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70வது மடாதிபதியாக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது.
Loading...
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காஞ்சி சங்கரமடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் சங்கர மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்பையும் அவரே கவனிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...