நடிகை ஓவியா, படப்பிடிப்பு தளத்தில் திடீரென துப்புரவுப் பணியாளராக மாறி கொசு மருந்து அடித்து படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஓவியா கொசு மருந்து அடிக்கும் வீடியோ இப்போது சமுக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது.
நடிகை ஓவியா, நடிகை என்கிற பந்தா இல்லாதவர். இயல்பாகவும், எளிமையாகவும் இர்பத்து தான் ஓவியாவின் சுபாவம். எந்த நேரமும் கலகலப்பாக இருக்கும் அவர், தான் இருக்குமிடத்தையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை அவர் நிரூபித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும், வந்தவரை லாபம் என அத்தனையையும் வாரிப் போட்டுக் கொள்ளாமல், படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘காஞ்சனா 3’, ‘களவாணி’ மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ என செலக்ட்டிவாக நடித்து வருகிறார்.
இதில், ‘காஞ்சனா 3’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஓவியா இடம் பெரும் ஒவ்வொரு நாளும் இந்தப் படப்பிடிப்பு தளம் அமர்க்களப்படுகிறதாம்.நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் ‘காஞ்சனா 3’ படப்பிடிப்பி நடந்தது.
அந்தப் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் சில துப்புரவுப்பணியாளர்களை வரவழைத்து கொசு மருந்து அடிக்க படப்பிடிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.