நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
வெலிங்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில், அணித்தலைவர் இயன் மோர்கன் 48 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 39, பட்லர் 29, மொயின் அலி 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் சோதி 3 விக்கெட்களையும் போல்ட் 2 விக்கெட்களையும் சௌதி மற்றும் கிரான்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 235 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 4 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் வில்லியம்ஸன் 112 ஓட்டங்களையும் முன்ரோ 49 மற்றும் சான்ட்னர் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனான மொயின் அலி தெரிவானார்.