சுவிட்சர்லாந்தின் தலைநகரான Bernஇல் அமைந்திருக்கும் Church of the Holy Spirit ஆலயத்தினுள் நுழைந்த ஒருவன் தான் வெடி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டியதை அடுத்து அங்கு வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர்.
அவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பொலிசார் அவனை சோதனையிடும்போது அவனிடம் சந்தேகத்திற்குரிய சில பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ள பொலிசார், ஆய்வு முடிவுகள் வர தாமதமாகும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
ஆலயம் தலைநகரின் முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் ரயில் நிலையத்தின் நுழைவாயிலை மூடியுள்ள பொலிசார் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படாது என்றும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேறு வழியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.