Loading...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, அந்த அலுவலத்துக்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலம் எதிர்வரும் புதன்கிழமையே நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகிறது.
Loading...
ஆனால் அதற்கு முன்னதாகவே அரசாங்கம் அதற்கான ஆணையாளர்களை நியமித்துள்ளமை கண்டனத்துக்குரியது.
இந்த அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...