பிரதமருக்கு எதிராக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பிரதேச சபை தேர்தலில் தெரிவான உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலக்தில் நேற்றையநாள் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கவனமாக உள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பிரேரணை எதன் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்றது என்பதனை ஆராய உள்ளதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா
நாடாளுமன்றக் குழு குறித்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.