சுதந்திர கிண்ண முக்கோண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குகொண்டன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 49 பந்துகளில் 90 ஓட்டங்களை ஆகக் கூடுதலாக பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்த இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் குசல் ஜனித் பெரேரா 37 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த நிலையில், ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை சார்பில் விரைவாக அரை சதம் பெற்றவர் வரிசையில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
குமார் சங்ககார 21 பந்துகளில் அரைசதம் பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் குசல் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.