அனைத்து மக்களும் தத்தமது பிரதேசங்களில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதகுருமாருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுயள்ளார்.
நாட்டின் தற்போதைய ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முப்படைகளினதும், பொலிசாரினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய பிரதேச பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாராக இருக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க
நாடெங்கிலும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அமைதியைப் பேண வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலிப் பிரசாரங்களில் சிக்காமல் நாட்டில் அமைதியைப் பேணுவது முக்கியமானது என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்கி அமைதி பேண உதவுவமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.