சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் தவறான பிரசாரங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.