Loading...
நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் ஏந்திய இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Loading...
பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை இன்று காலை தொடக்கம்; முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள குறித்த ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லிம் குடும்பங்கள் வழிபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...