இலங்கையில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண தொடரை, இலங்கை அணி கைப்பற்றுவதற்கு அதிகவாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ரி-ருவென்ரி தொடர், குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை அணியில் நட்சத்திர வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், அசேல குணரட்ன, போன்ற வீரர்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அணி தொடரை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அத்தோடு, இலங்கை அணியின் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்கா மீது நம்பிக்கை உள்ளது. இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் இல்லாததும் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு ஒரு காரணமாக அமையும்” என கூறினார்.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.