Loading...
‘அவள் இல்லாத உலகம்’ எனும் தொனிப்பொருளில் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
Loading...
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே கலந்து கொண்டார். இதன்போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறைசாரா பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன் முதற்பிரதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரேயிக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.
Loading...