நாட்டின் இராணுவத்தில் பீல்ட் மார்சல் அதிகாரியாக தொடர்ந்து செயற்பட்டுவருபவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமிக்க முடியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றைய நாள் கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சரத் பொன்சேகா கடந்த ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாக சுட்டிக்காட்டிய தயாசிறி ஜயசேகர
பொன்சேகா இப்பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் பழிவாங்கல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இராணுவத்தில் உள்ள ஒருவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமித்தால் அது பல பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.