படத்தின் காட்சிக்கு அவசியமானால் நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
ஆண்ட்ரியா மாறுபட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர்.
அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
கடந்த ஆண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
32 வயதான ஆண்டரியா ஜெரேமியா நல்ல பாடகியும் கூட. அவ்வப்போது சமூக பணிகளுக்கு உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்துவார்.
அண்மையில் சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்ட்ரியா.
அப்போது அவர் உரையாற்றுகையில் “சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
தரமணி படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சியடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.
திரையில் நான் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயார்.
ஆனால், கதையில் அந்தக் காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்” எனக் கூறினார் ஆண்ட்ரியா