உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சாம்பியன் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து சில தினங்கள் தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வந்த மெஸ்ஸி, சாம்பியன் லீக் தொடரில் செல்சி அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கினார்.
பலம் பொருந்திய இவ்விரு அணிகள் மோதும் போட்டி என்பதால், ரசிகர்கம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது
இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம், மெஸ்ஸி சாம்பியன் லீக் தொடரில் தனது 100வது கோலைப் பதிவு செய்து புதிய சாதனைப் படைத்துள்ளார். பொதுவாக இந்திய அணியில் ரோஹித் சர்மா திருமண நாள், காதலர் தினம் என முக்கிய நாட்களில் சிறப்பாக விளையாடு அந்நாளை கொண்டாடுவது போல், மெஸ்ஸி தனது மூன்றாவது குழந்தையின் வருகையை 100 கோல்கள் அடித்து கொண்டாடியுள்ளார்.