மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள்.
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.
திட்டமிடாத செலவுகளையும், பயணங்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்ற முடிவுக்குவருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
எதிர்பார்த்தவரிடமிருந்து உதவிகள் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
உற்சாகமாக இருப்பீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்- புதிய பாதை தெரியும் நாள்.
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைசுமை அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.