Loading...
சிரியா – ஈராக் எல்லையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்கில் உள்ள அல்-காம் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 7 வீரர்களும் பலியாகியுள்ளனர்.
Loading...
தகவல் அறிந்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்க பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...