அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
45 வயதுடைய பட்ரீஷியா அன் ஸ்பான் என்பவர் தனது 26 வயது மகளான மிஸ்டி டான் ஸ்பானை திருமணம் செய்து கொண்டதாக ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தன் மகளுடன் இணைந்துள்ளார். அமெரிக்காவில் ஓரின சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்ட பின் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாயும் மகளும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் இதற்கு முன்னர் பட்ரீஷியா தனது மகனையும் திருமணம் செய்து கொண்டது விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பட்ரீஷியாவின் மகனுக்கு 18 வயது ஆனபோது இத்திருமணம் இடம்பெற்றுள்ளது. ஆனால் பின்னர் இவர்களது திருமணம் செல்லாது என 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்ரீஷியாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையோடு 8 ஆண்டுகள் நன்னடத்தை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும். மேலும் தண்டனையில் இருந்து வெளிவரும் போது தாம் ஒரு பாலியல் குற்றவாளி என்பதையும் அவர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விதிகளின்படி நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொள்வது முறையற்றதாகும். இந்நிலையில் பட்ரீஷியா தனது மகன் மட்டுமல்லாமல் மகளையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.