மக்கள் மற்றுமின்றி பல பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அந்த வகையில் நேற்று இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச பங்கேற்றது. அப்போது இந்திய அணி விளையாடும்போது இறுதியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணியை வெற்றியடைய செய்தது.
வங்கதேசம் எதிர்பாராத விதமாக இந்திய அணி வெற்றி பெற்றது. வங்கதேசம் இலங்கை அணியுடன் விளையாடும்போது வெற்றி அடைந்ததை தொடர்ந்து குஷியாக பாம்பு டான்ஸ் ஒன்றை ஆடினார்கள். அவர்கள் ஆடிய அந்த பாம்பு டான்ஸ் விமர்சிக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணி வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.