கமலும் கௌதமியும் 13 வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த இருவரும் திடீரென பிரிவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் கௌதமி.
இவர் இந்த தகவலை வெளியிட்டதும் பலருக்கும் பலவிதமான கேள்விகளும், சந்தேகங்களும், எழுப்பிய நிலையில் இது குறித்து தற்போது கௌதமி ஊடகம் ஒன்றிற்க்கு பேட்டி அளித்துள்ளார்.
கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விளக்கமாக தன்னுடைய பிளாக்கில் கொடுத்துள்ளேன் இருப்பினும் என்னை இந்த கேள்வி விடாமல் துரத்தி வருகிறது.
நான் கமலை விட்டு பிரிய வேண்டும் என்று ஒரு நாள் இரவில் எடுக்கவில்லை. இரண்டு வருடம் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நங்கள் பிரிந்ததற்க்கு காரணங்கள் பல இருந்தாலும் அனைத்தையும் என்னால் வெளியில் சொல்ல முடியாது அது இருவருக்குமான தனிப்பட்ட விஷயம் என்று கௌதமி தெரிவித்துள்ளார்.