அதிக உடல் எடை உடையவர்கள், மாடிப்படி அடிக்கடி ஏறி இறங்குவது, இந்திய முறை கழிப்பிடங்களை உபயோகிப்பது, கால்சியம் விட்டமின் பற்றாக்குறை போன்ற காரணத்தினால் முழங்கால் மூட்டு தேய்மானம் அடைந்து கடுமையான மூட்டு வலி ஏற்படும்.
இந்த மூட்டு வலி பிரச்சனையை குணமாக்க சில அற்புத இயற்கை வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று,
தேவையான பொருட்கள்
- வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் – 1 கப்
- வரமிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
பின்பற்றுவது எப்படி?
கை உறைகளை அணிந்துக் கொண்டு வரமிளகாய் பொடியை ஆலிவ் ஆயில் ஆகிய இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து வலியுள்ள மூட்டுப் பகுதியில் தடவ வேண்டும்.
பின் 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையைப் பின்பற்றிய பின், கைகளை முகம் அல்லது கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது.
எத்தனை முறை செய்யலாம்?
இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை என்று தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றினால், மூட்டு வலி பறந்தோடிவிடும்.
எப்படியெனில், வரமிளகாயில் உள்ள கேப்சைசின் எனும் பொருள், வலி நிவாரணி போன்று செயல்படுவதால், மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பு
மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த வழியைப் பின்பற்றக் கூடாது. காயங்கள் மற்றும் சென்சிடிவான சருமம் உள்ளவர்கள் மட்டும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.