ஏமன் நாட்டில் இருந்து ஹூதி போராளிகள் மீண்டும் சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் சவுதி குடிமகன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக சவுதி அரசு மூர்க்கத்தனமான தாக்குதலை கட்டிவிழ்த்து விட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹூதி போராளிகளும் சவுதி அரேபியா மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் சவுதியும் இதற்கு பதிலடி தரும் வகையில் தொடர்ந்து தாக்குதலை முடுக்கி விட்டும் வருகிறது.
இந்த நிலையில் நேற்று சவுதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் ஹூதி போராளிகள் வீசிய ஏவுகணை ஒன்று வந்து விழுந்தது தாக கூறப்படுகிறது.
அதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.