பேஸ்புக் நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிடுபவர்களை கண்டுபிடிக்க, இந்திய பெண் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சமூக வலைதளமான பேஸ்புக்கில் நடக்க இருக்கும் மாற்றங்களை, முன்கூட்டியே அந்நிறுவன ஊழியர்கள் சிலர் போட்டி நிறுவங்களுக்கு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பேஸ்புக் நிறுவனத்தில் இந்த பிரச்சனை உள்ளது. அந்நிறுவனம் எந்த ஒரு பொருள் குறித்து விவாதம் செய்தாலும், எதிர்கால திட்டங்கள் வகுத்தாலும் அது போட்டி நிறுவனங்களுக்கு தெரிந்துவிடுகிறது.
இந்நிலையில், பேஸ்புக்கில் நடக்கும் அலுவலக கூட்டங்களில் இருந்து தான், இந்த தகவல்கள் வெளியானது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பேஸ்புக் தங்கள் Timeline கொள்கைகளை மாற்றியது கூட இவ்வாறு தான் கசிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழு ஒன்றை மார்க் ஜூக்கர்பர்க் நியமித்துள்ளார்.
இந்த குழுவானது, பேஸ்புக் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேலும், ஊழியர்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும்