தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்த நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரேயா. இவர் ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோசீவை காதலித்து வந்தார். ஆனால் அதை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தார்.
ஸ்ரேயா அவருடைய ரஷ்ய காதலரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியான போது, அதை அவருடைய தாயார் நீரஜா மறுத்தார். ஸ்ரேயாவும் தனக்கு இப்போது திருமணம் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில். ஸ்ரேயா திருமணம் இந்த மாதம் 16,17,18 ஆகிய 3 நாட்கள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. என்றாலும் அவருடைய ரஷ்ய காதலரைத்தான் மணக்கிறார் என்றும் புதிய செய்தி வெளியானது.
ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 12-ந் தேதியே மும்பையில் உள்ள வீட்டில் ஸ்ரேயா அவரது காதலர் ஆண்ட்ரே கோசீவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், முன்னதாகவே ஸ்ரேயா- ஆண்ட்ரே கோசிவ் ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று இந்தி பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.