வையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ்கள் – 4,
பால் – 1/3 கப்.
சர்க்கரைப் பாகிற்கு…
சர்க்கரை – 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
பொடித்த ஏலக்காய் – 2,
ரோஸ் எசென்ஸ் – 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க பொடித்த பாதாம் – ேதவைக்கு
தயாரிக்கும் முறை
* பிரெட்டின் ஓரங்களை எடுத்து விட்டு, நடுப் பகுதியை பாலில் தோய்த்து பிழிந்து, சாஃப்ட்டான மாவாக பிசையவும்.
* பிசைந்த மாவை சரிசம பாகங்களாக பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
* வாணலியில் எண்ணெயை காயவைத்து மிதமான தீயில் உருண்டைகள் உடையாதவாறு எல்லாப் பக்கமும் பொன்னிறமாகும்படி பொரித்தெடுக்கவும்.
* பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள பாகில் போடவும்.
* 1 அல்லது 2 மணி நேரம் ஊறிய பிறகு சூடாகவோ, சில்லென்ற பாதாம் பருப்பை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு:
பாகு மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
அதிக சூடாகவோ, ஜில்லென்றோ இருக்கக்கூடாது. அதிக தணலில் ஜாமூன்களை பொரித்தால் வெளிபுறம் வெந்தும், உள்ளே மாவு வேகாமலும் இருக்கும்.