இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி துபாயில் கடந்த மாதம் 17, 18–ந் திகதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மொடல் அழகி அலிஷ்பாவுடன் இவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் அவர் கிரிக்கெட் முறையீடுகளிலும் ஈடுபட்டார் என மனைவி அளித்துள்ள புகார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முகமது ஷமி தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் மற்ற வீரர்களை போல் உடனடியாக தாயகம் திரும்பவில்லை, அவர் அங்கிருந்து துபாய்க்கு சென்றார். அங்கு இங்கிலாந்து தொழிலதிபர் கொடுத்த பணத்தை பாகிஸ்தான் மாடல் அழகி அலிஷ்பா மூலம் வாங்கி வந்தார்.
அலிஷ்பா எனது குடும்ப வாழ்க்கையை சீரழித்துவிட்டடார் என மனைவி ஹசின் ஜஹன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியாம் முகமது ஷமி துபாய்க்கு சென்றாரா என்பது குறித்த விவரங்களை சேரித்து, அவரது பயண விவரங்களை கொல்கத்தா பொலிசிற்கு கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது.
முகமது ஷமி துபாயில் கடந்த மாதம் 17, 18–ந்தேதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து கொல்கத்தா பொலிசின் விசாரணை தீவிரமாகியுள்ளது.