பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண கேக்கினை லண்டனை சேர்ந்த பிரபல பேக்கரி ஒன்று வடிவமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியின் நிச்சயதார்த்தம் இடம்பெற்றதில் இருந்து அவ்வப்போது அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவரது திருமணம் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் இப்போதே ஆயத்த வேலைகள் அரண்மனை சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹரி மற்றும் மெர்க்கல் இருவரும் தங்கள் திருமண கேக் வடிவமைப்பாளராக கலிபோர்னியரான Claire Ptak என்ற பெண்மணியை தெரிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து ஹரி – மேகன் மெர்க்கல் திருமணத்திற்கான கேக்கினை வடிவமைக்கவுள்ள பேக்கரியின் உரிமையாளர் Claire Ptak இளவரசர் ஹரியின் திருமண கேக் தொடர்பில் முக்கிய தகவலைய வெளியிட்டுள்ளார்.
ஆர்கானிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி கேக் தயாரித்துவரும் Claire Ptak இளவரசர் ஹரி திருமணத்திற்காக பூக்களாலான கேக் ஒன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அரண்மனை வட்டாரமும் உறுதி செய்துள்ளதுடன் திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களும் மிகவும் விரும்புவர் எனவும் தெரிவித்துள்ளது.