ஒட்டுமொத்த திரையுலகமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் சென்னை விக்டோரியா மஹாலில் இடம்பெற்றது.
இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும் ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரை்.
இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் தமிழன்னு சொன்னா திமிர் ஏறும் என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மெர்சல் படத்தின் ஆழப்போறான் தமிழன் பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய் நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் புலப்படும் வகையில் இந்த ட்வீட்டை கருணாகரன் பதிவிட்டுள்ளார் போன்று தென்படுகின்றது.
இருப்பினும் கருணாகரன் உண்மையில் விஜய்யை கலாய்ப்பதற்காக இந்த ட்வீட்டை பதிவிட்டாரா? அல்லது வேறு அர்த்தமா? இதற்கு அவரே விளக்கம் அளித்தால்தான் உண்மை புலப்படும்.