தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது அஜித் ஒப்பந்தமாகியுள்ள படம் விசுவாசம்.
இந்த நிலையில், அண்மையில் பிரபல சின்னதிரை நடிகை சிந்து ஷயாம் ஒரு பேட்டியில் இவரை குறித்து பேசியுள்ளார். அஜித் புகைப்படத்தை காண்பித்து, இவரை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அந்த பேட்டியில் சிந்துவிடம் கேட்டார்கள். அதற்கு சிந்து ஷயாம், அஜித் மிகவும் அழகான தோற்றத்தை உடைய நடிகர். இவர் ஒரு ஆண்அழகன் என்று கூறினார்.
ஆனால் சமீபத்தில் இவர் நடித்த எந்த படங்களும் சிந்துவிற்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளது. இவரின் சமீபத்திய படங்கள் பிடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.