அவுஸ்ரேலியா அணி வீரர் ஸ்மித்தை இடித்ததால் தென்னாபிரிக்கா வீரர் ரபாடாக்கு விதிக்கப்பட்டிருந்த 2 டெஸ்ட் போட்டி தடை நீக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 1 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இதனடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வீரர் ரபாடா 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் இப் போட்டியில் அவுஸ்ரேலியா அணி வீரர் ஸ்மித் ஆட்டமிழந்து செல்கையில், அவருடன் ரபாடா உடல் ரீதியாக மோதியுள்ளார். இதனால் 2 போட்டிகளுக்கு ரபாடாக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 50 வீத அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் அவுஸ்ரேலியா அணி வீரர் வார்னரையும் சீண்டியதற்காக மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே ரபாடா பெற்றுள்ள 5 தகுதி இழப்பு புள்ளிகளுடன், இதன்போது பெற்ற 4 புள்ளிகளும் சேர்ந்து, 9 தகுதி இழப்பு புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ரபாடா மீது விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், ரபாடா மீதான் 2 போட்டி தடை நீக்கப்பட்டுள்ளதுடன், அபராதமும் 25 சதவீதத்தால் குறைத்து, தகுதி இழப்பு புள்ளிகளையும் 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றால் ரபாடா மீது டெஸ்ட் போட்டிக்கான தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது