உத்திர பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை கட்டியெழுப்ப ஆதரவு திரட்டுவதற்காக விசுவ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரையானது நடத்தப்பட்டது வருகிறது. இந்த ரத ராத்திரையானது மக்களை மத ரீதியிலாக பிளவு படுத்திடும் நோக்கிலேயே சங்க பாரிவர் அமைப்புகளால் நடத்தப்படுகிறதெனவும், இதன் காரணமாக தேவையற்ற சர்ச்சைகளும், மத மோதல்களும் உண்டாக்கிடக்கூடுமென தெரிவித்து ரத யாத்திரையினை அரசு தடை செய்திட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன திமுக உள்ளிட்ட சனநாயக முற்போக்கு சக்திகள்.
அதே சமயம், ரத யாத்திரைக்கு அனுமதி அளித்ததுடன் மட்டுமின்றி, அதனை எதிர்த்த தலைவர்களையும், மக்களையும் கைது செய்தும் அப்பட்டமான மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது தமிழக அரசு.
இந்நிலையில், “தமிழகத்தில் மதசார்பின்மையை குலைக்கும் நோக்குடன் ராமராஜ்ஜிய ரதயாத்திரை நடத்தப்படுகிறது எனவும், தமிழகத்தில் மதசார்பின்மையை குலைக்கும் நோக்குடன் ராமராஜ்ஜிய ரதயாத்திரை நடத்தப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இவற்றை இரும்புக் கரம் கொண்டு தடுத்திருப்பார்” எனவும் ரத யாத்திரை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.