இளைய தளபதி விஜய்யின் படங்கள் தமிழ் நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவது நல்ல வெற்றியை கொடுப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், கேரளாவில் தமிழ் நாட்டிற்கு இணையாக விஜய்க்கு நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் தான் விஜய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். விஜய் ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருவது அவ்வப்போது செய்திகளாக பரவும்.
அண்மையில் கூட கேரளாவில் விஜய் மற்றும் அவரின் படம் பற்றி தவறாக விமர்சித்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம் செய்தார்கள். அதே போல் தான் சமூக வலைத்தளங்களில் கூட விஜய் ரசிகர்கள் விஜய்யின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில், விஜய் ரசிகர் ஒருவர் விஜய்க்காக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். The Icon of Millions என்ற இந்த புத்தகம் விஜய் ரசிகராகிய நிவாஸ் என்கிற பொறியாளர் மாணவரால், விஜய் அனுமதியுடன் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் விஜய்யின் டயட், அவருக்கு பிடித்த விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார்களாம்.
மேலும், இந்த புத்தகத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்கள், ஒரு ஆப்ஸ்சில் உள்ள கேமரா மூலம் புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை ஸ்கேன் செய்தால் நமது போனில் விஜய் செல்பி எடுப்பது போல் ஒரு புகைப்படம் தோன்றும், அப்போது நம்மால் விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியுமாம். இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.