பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வரும் நிகழ்ச்சி தான் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் ஒரு பெண்ணை தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
இதில் ஆர்யாவிற்காக 16 பெண்கள் போட்டி போட களமிறங்கினர். சமீபத்திய நிகழ்ச்சி முடியில் 10 பெண்கள் மட்டுமே உள்ளனர், மற்றவர்கள் வெளியேறிவிட்டனர்.
இனி இருப்பவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது என்ன தகவல் என்றால் பொதுவாக ஒரு படத்திற்கு ஆர்யா இரண்டு மாதம் கால்ஷீட் கொடுப்பாராம், அதோடு 2ல் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவாராம்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மட்டும் ஆர்யா ரூ. 8ல் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை இதுகூட உண்மையா இருக்குமோ?