இந்தியர்கள் பயன்படுத்தும் 41 Mobile செயலிகளில், சீனாவின் உளவு பார்க்கும் வைரஸ்கள் இருப்பதாக புலனாய்வு மற்றும் ராணுவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் பயன்படுத்தும் Mobile செயலிகளில், சீனாவை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட பிரபலமான 41 செயலிகள் உள்ளன, இவற்றில் உளவு பார்க்கும் ‘மால்வேர்’கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட Mobile செயலியை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள ’Server’ எனும் பிரதான கணினிக்கு அனுப்பும்.
இதனால், நம் நாட்டின் மீது ‘Cyber’ தாக்குதல் எனப்படும் மென்பொருள் வழி தாக்குதல்களை சீனா தொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த செயலிகள் IOS, Android ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியவை ஆகும். மேலும், அந்த 41 செயலிகளில் WeChat, UC Browser, Share it போன்ற முக்கியமான செயலிகளும் இடம்பெற்றுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.