முன்னணி இயக்குனர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா அடுத்து இணையவுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்துவரும் NGK படம் முடிந்தபிறகு சூர்யா இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா வாரியர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. கேரளாவை சேர்ந்த ப்ரியா வாரியர் ஒரே டீசரில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் தான் ப்ரியா வாரியரை அணுகவே இல்லை என விளக்கமளித்துள்ளார். மேலும் ஒரு முன்னணி ஹீரோயினை சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ப்ரியா வாரியர் ரசிகர்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர்.