திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் 5493 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவுபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த வேலைத்திட்டங்களுக்காக 1328.637 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள்இ பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம், விசேட கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, கிராம சக்தி,
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீடு, ஏனைய மத்திய அரசின் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.