மெல்ட்-டவுன் மற்றும் ஸ்பெக்டர் போன்ற புதிய பிழைகளை கண்டறியும் டெவலப்பர்களுக்கு 2,50,000 டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடி) வரை வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் சைடு-சேனல் பிழைகளை கண்டறியும் நோக்கில் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு புதிய வகையான பிழைகள் ஜனவரி 2018-இல் அறிவிக்கப்பட்டு, இதுபோன்ற ஆய்வுகளில் மிகமுக்கிய வளர்ச்சியாக இருக்கிறது என மைக்ரோசாஃப்ட் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுருக்கிறது.
அதிகப்படியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளதால் இவ்வறிப்பு வெளியாகியுள்ளது.
ஹேக்கிங் செய்யக்கூடிய பிழை இருப்பதை இன்டெல் சமீபத்தில் உறுதி செய்திருந்தது.
பாதுகாப்பு வல்லுநர்களின் படி ஸ்பெக்டர் மற்றும் மெல்ட் டவுன் பெயரில் சிபியு அளவிலான பிழை இன்டெல் கடந்த இரண்டு தசாப்தங்களில் உருவாக்கிய சிப்செட்களிலும், ஏ.எம்.டி மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங் தயாரித்திருக்கும் சிப்செட்களை பாதித்து இருக்கிறது.
பிரச்சனையை ஏற்படுத்தும் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு பேட்ச்களை அப்டேட் மூலம் வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.