Loading...
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்றது. ஊரப்பாக்கம்- கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென பெட்டிகளின் இணைப்பு சங்கிலிகள் உடைந்துள்ளது. ரெயில் பெட்டிகள் கழன்று இரண்டு பகுதியாக பிரிந்து நடுவழியில் நின்றதால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இணைப்பு துண்டாகி பிரிந்த இரண்டு பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அந்த ரெயில் புறப்பட்டுச் சென்றது.
Loading...
இந்த விபத்து காரணமாக, புறநகர் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
Loading...