எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டி.வி நிகழ்ச்சியில் நடிகர் ஆரியாவிற்கு தீவிராமாக பெண் தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான தேவசூர்யாவை எலிமினேட் செய்வதாக ஆர்யா அவரிடமே நேரடியாக கூறியுள்ளார்.
பெரும்பாலான பார்வையாளர்களினால் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்த இவர் திடீர் என்று போட்டியில் இருந்து விளக்கப்பட்டுள்ளார்.
கல்யாணம் செய்தால் அது வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் பிடிக்கவில்லை என டைவர்ஸ் செய்வது எனக்கு வேண்டாம். நாம் நட்போடு இருப்பது ஓகே, ஆனால் லைப் பார்ட்னராக இருப்பது கஷ்டம் என்று தோன்றுவதாக ஆர்யா கூறியுள்ளார்.
இந்த நிலையில் கவலையுடன், தேவசூர்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் புதிய சர்ச்சைகள் உருவாகி வருகின்றது.
இது எதையும் பொருட்படுத்தாது இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் என்ன சர்ச்சை உருவாக போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.