தாதியர் சேவையில் நிலவும் 17 பிரச்சினைகளுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சேவை சங்கத்திற்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது, தாதியர் சேவையை முக்கிய சேவையாக மாற்றுதல் கொடுப்பனவுகளை அதிகரித்தல், தாதியர் சேவைக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட 17 விடயஙகள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
நெவில்பெர்னாண்டோ வைத்திய சாலையின் தாதியர்கள் ஊதியம் தாமதம் ஏற்படுவதும் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தாதியர் கல்லூரி ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் 5 தாதியர் கல்லுரிகளுக்கு பஸ்களை வழங்குவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.