கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
கனடாவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அமெரிக்காவைவிடக் குறைவாக இருந்தாலும் ஐரோப்பா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைவிட அதிகமாக உள்ளது.
சமீப காலமாக துப்பாக்கி தொடர்பான குற்றங்கள் கனடாவில் அதிகரித்து வருகின்றன.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றங்களில், 2,465இல் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, Torontoவில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் 392 துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
ஏராளமான கிராம மக்களைக் கொண்ட நாடாகிய கனடாவில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.
இதனால் அங்கு துப்பாக்கி பயன்படுத்துவது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
புதிய துப்பாக்கி விதிகள் நிச்சயம் 2019 தேர்தலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் Ralph Goodale சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உரிமைகளை அரசு பாதுகாப்பதாகத் தெரிவித்தார்.
புதிய சட்டங்களின் அமசங்களாவான
- துப்பாக்கி வாங்குபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- உரிமம் வழங்குவதற்குமுன் வாங்குபவர் குற்றப்பின்னணியோ, மன நலப் பிரச்சினைகளோ உடையவரா என்பது முதலான விடயங்கள் உறுதி செய்யப்படும்.
- பயணத்தின்போது துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் கனடாவின் துப்பாக்கி வன்முறைகளை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவருமோ தெரியவில்லை என்று துப்பாக்கி கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.