அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நியூஸிலாந்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஒபாமாவிற்கு அந்நாட்டின் பழங்குடியின மக்களான மாவோரி மக்கள் பிரமாண்டமான வரவேற்பை அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஒபாமா நியூஸிலாந்து பிரதமர் ஜஸின்டா ஆர்டெர்னை சந்தித்து சுமார் 55 நிமிடம் கலந்துரையாடியுள்ளார்.
இதில் காலநிலை மாற்றம் ஒபாமா ஆட்சியில் இருந்தபோது நியூஸிலாந்து நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வியாழக்கிழமை மாலை ஒக்லான்டில் சுமார் 1000 பேர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஒபாமா, பெண்கள் தலைமைத்துவம், குடும்ப வாழ்கை மற்றும் ஒசாமா பின்லேடன் மீதான தைரியமான தாக்குதல் குறித்து உரையாற்றியுள்ளார்.
முன்னதாக புதன்கிழமை பாராக் ஒபாமா, நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் கீ உடன் இணைந்து கோல்ப் விளையாடி மகிழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நியூஸிலாந்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்ட ஒபாமா அடுத்ததாக அவுஸ்திரேலியாவை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.