கொழும்பை அண்மித்த பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தொலைபேசி அழைப்பினால் வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பறவை ஒன்று உயிரிழந்து கிடந்ததனையே காண முடிந்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். யாரோ சிலரினால் வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஏனைய பொலிஸ் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார்.
அங்கு செல்லும் வரை உயிரிழந்த சடலத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிப்பு விடுப்பதற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி மறக்கவில்லை.சற்று நேரத்திற்கு அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அங்கு பறவை ஒன்றே உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் கோபத்துடன் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.