திருப்பூரில் பச்சிளம் குழந்தையின் கண்முண்ணே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கலாபக்காதலன் திரைப்பட பாணியில் அக்காவின் கணவர் மீதான ஆசையால் கொலைகாரியாக மாறிய தங்கை.
கொலையான பெண்ணின் கணவர் பூபாலனின் சகோதரர் ஜீவா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர்.
கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், நதியாவின் சித்தி மகளான ரேகாவின் மேல் சந்தேகமடைந்து அவரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கொலை நடந்த அன்று அதிக முறை பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து நாகராஜனை விசாரித்த போது, ரேகாவின் தூண்டுதலின் பேரில் நதியாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.ரேகாவிற்கு பூபாலன் பண உதவி செய்து வந்ததால் அவர் மீதும் ஆசை வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பூபாலனின் சொத்துக்கள் மீது ஆசை கொண்ட ரேகா அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்துள்ளார். தனது அக்கா இறந்துவிட்டால் தாயை இழந்த குழந்தையைக் கவனிக்க தன்னைத்தான் பூபாலனுக்கு மணமுடித்து வைப்பார்கள் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆண் நண்பர் நாகராஜின் மூலம் அதனை செய்தும் முடித்துவிட்டார்.கொலை நடந்த அன்று ஒன்றும் தெரியாதது போல் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.