டோரரோண்டோவில் காணாமற்போனவர்கள் குறித்து நிலுவையில் இருக்கும் வழக்குகளை மறு சேறைவிற்கு எடுத்து கொண்டு பரிசீலிக்கப்படும் என்று டொரோண்டோ போலீஸ் சர்வீசஸ் போர்டு, மேயர் டோரி தலைமையில் இன்று நடத்திய கூட்டத்தில் தெரிவித்தது.
டொரோண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் வாழும் பகுதியிலிருந்து காணாமற்போன 7 இளைஞர்களின் வழக்குகளின் நிலையினை குறித்து மேற்கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று இன்று தீர்மானிக்கப்பட்டது.முன்னதாக இந்த மறு பரிசீலினை குழு ஆய்வினை நிகழாத வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் டக் எலியட் கோரிக்கை விடுத்தார்,மேலும் முப்பதிற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் நாடாகும் கட்டிடத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இந்த வழக்குகளை கையாள்வது மட்டுமின்றி,இத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பதற்கும், சரிவர இயங்காத போலீஸ் துறையே காரணம் என்று முழக்கமிட்டனர்.போலீஸ் அதிகாரி மார்க் சவுண்டர்ஸ் மீதான அதிருப்தியையும் இவர்கள் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.