இந்த ஆண்டு உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திருமணம் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்ள் திருமணம்.இந்த ஆண்டின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்கப்படும் முக்கிய நிகழ்வாக இவர்களது மே 19 திருமணம் இருக்கும்.
இந்நிலையில் வருங்கால இளவரசி திடீரென ஆயுதத்துடன் பலர் சூழ கடத்த பட்டிருக்கிறார்,பின்னர்தான் இது வழக்கமாக அரச குடும்பத்தினருக்கு நடத்தப்படும் ராணுவ பயிற்சி என்பது தெரியவந்துள்ளது.பிரிட்டிஷ் ராணியை தவிர்த்து அரசு குடும்பத்தை சார்ந்த அனைவருக்குமிந்த பயிற்சியானது அளிக்கப்படும்,பிரிட்டிஷ் ராணுவத்தின் மிக உயரிய பயிற்சி பெற்ற குழு அவரை கடத்தி பிணைய கைதியாக வைத்துள்ளார்கள்.
இந்நிகழ்வின் போது உண்மையாக துப்பாக்கியில் சுட்டிருக்கிறார்கள், துப்பாக்கி சுடும் சத்தம் அவருக்கு பழக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்,இத்தகைய சந்தர்ப்பம் நேரிட்டால் அவர் எப்படி சமாளிப்பார் என பயிற்சி அளிக்கவுமே இந்த வினோதமான கடத்தல் நாடகம்.இளவரசி மேகன்,கடத்தல் காரர்களிடம் பேச்சு கொடுக்க முயன்றதாகவும், சண்டையிடாமல் சமயோசிதமாக அவர் செய்தது சரியானது எனவும் உயர் ராணுவ அதிகாரிகள் கருது தெரிவித்து உள்ளனர்.